சேதுபாவாசத்திரம்,மல்லிப்பட்டிணம்,ஆண்டிக்காடு ஊராட்சி காயிதே மில்லத் நகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள் சேறும்,சகதியுமாக காணப்படுவதால் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கை மிக நீண்ட காலமாகவே அந்த பகுதி மக்களிடம் இருந்து வருகிறது.பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சாலையினை சீரமைத்து தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment