பணம் கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் கைது.!

ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய பாஜ நிர்வாகிகள் கைது

புழல் காவாங்கரை மாரியம்மாள் நகர் சேர்ந்தவர் அமர்நாத் (39). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், இதே பகுதியில் 4.5 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

 இந்நிலையில் கடந்த 19ம் தேதி புழல் 23வது வட்ட பாஜ தலைவர் வெங்கடேசன், வட்ட செயலாளர் ஏழுமலை ஆகியோர் அமர்நாத் மற்றும் நிலத்தின் மேற்பார்வையாளர் விக்னேஷ் ஆகியோரிடம் சென்று பணம், வீட்டுமனை கேட்டுள்ளனர். அவர்கள் தர மறுத்ததால், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி உள்ளனர்.மேலும், வீட்டுமனை போடுவதற்கு மேலும், வீட்டுமனை போடுவதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கம்பம் வைத்து பாஜ கொடி ஏற்றியுள்ளனர். இதுபற்றி அமர்நாத் புழல் போலீசில் புகார் கொடுத்தார்.

 அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பாஜ நிர்வாகிகள் வெங்கடேசன், ஏழுமலை ஆகியோரை கைது செய்தனர்

Post a Comment

Previous Post Next Post