மல்லிப்பட்டினம் ஊ.ஒ.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை கிரேசி ரூபா அவர்கள் காலமானார்.!

மல்லிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர்  கிரேசி ரூப வதனா அவர்கள் இன்று காலை 10:30 மணியளவில்  பட்டுக்கோட்டையில் காலமாகிவிட்டார்கள்.

மல்லிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் வளர்ச்சியிலும்,அதிகமான மாணவர் சேர்க்கையிலும் இவர்களின் பங்கு மகத்தானது.மேலும் இந்த பள்ளியிலே ஆசிரியராக பணியாற்றி தலைமையாசிரியாகவும் பணியாற்றினார்.

பள்ளி மாணவர்கள் புரியும் வண்ணம் கலை நயத்துடன் பாடங்களை நடத்துவதில் வல்லமை பெற்றவர்.மல்லிப்பட்டிணம் மக்களோடு நெருங்கி பழகியவர்.




Post a Comment

Previous Post Next Post