தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (நவ.1) விடுமுறை...!

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது.

மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை எதிரொலியாக தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு 

Post a Comment

Previous Post Next Post