தஞ்சை உட்பட 10 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!



தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் இரண்டாம் சுற்று தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை (11-11-2022) ரெட் அலார்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post