11,000க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் மெட்டா

ஃபேஸ்புக்கின் பிரதான நிறுவனமான மெட்டா குழுமம், அதன் ஊழியரணியில் 13 விழுக்காட்டினரை, அதாவது 11,000க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக புதன்கிழமை (நவம்பர் 9) அறிவித்துள்ளது. தொழில்நுட்பத் துறையில் செய்யப்படும் ஆகப்பெரிய பணிநீக்க நடவடிக்கைகளில் ஒன்றாக இது உள்ளது. செலவின அதிகரிப்பையும் வலுவிழந்துவரும் விளம்பரச் சந்தையையும் மெட்டா எதிர்கொண்டு வருகிறது. மெட்டாவின் 18 ஆண்டுகால வரலாற்றிலேயே, இத்தனை ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது இதுவே முதன்முறை. செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, 87,000க்கும் அதிகமான ஊழியர்கள் மெட்டாவில் பணியாற்றியனர். அடுத்த ஆண்டு முதல் காலாண்டு வரை வேலைக்கு ஆளெடுப்பதை மெட்டா நிறுத்திவைக்கும்.

Post a Comment

Previous Post Next Post