எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடக்கும் ஐநா ‘COP 27’ மாநாட்டில் சிங்கப்பூர் தனது முதலாவது கூடத்தைத் திறந்து இருக்கிறது.
அந்தக்கூடம், பருவநிலை பாதிப்புகளைக் குறைத்து சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கு சிங்கப்பூர் கொண்டுள்ள கடப்பாடுகளையும் பசுமை நிதி வளம், சூரிய மின்சக்தி போன்ற துறைகளில் இடம்பெறக்கூடிய சிங்கப்பூரின் புத்தாக்கங்களையும் வெளிப்படுத்தும் காட்சிக்கூடமாக திகழ்கிறது.
‘எதிர்காலப் பசுமை சாத்தியங்களைப் பலப்படுத்துவோம்’ என்ற கருப்பொருளுடன் கூடிய அந்தக் கூடம், நிறுவனங்கள், ஊடகம், கல்வித் துறை, அனைத்துலக அமைப்புகள், அரசாங்கம் சாரா அமைப்புகள் ஆகியவை அடங்கிய 100க்கும் மேற்பட்ட பங்காளிகளின் கூட்டு முயற்சியாக இடம்பெறுகிறது.
வரவேற்பு உரை ஆற்றிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, அந்தக் கூடம் சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் விருப்பங்களைப் பிரதிநிதிப்பதாகத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் வரும் 2050வது ஆண்டுவாக்கில் அறவே கரிமக் கழிவு இல்லாத சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
சிங்கப்பூர் கூடம் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன், ஆசியா 2050ஆம் ஆண்டுவாக்கில் அறவே கரிமக் கழிவு இல்லாத சாதனையை நிகழ்த்த உதவுவதற்குத் தேவைப்படக்கூடிய மூலதனத்தைத் திரட்டு வதில் சிங்கப்பூர் இன்றியமையாத பணியை ஆற்ற முடியும் என தெரிவித்தார்.
ஐநா சுற்றுச்சூழல் மாநாட்டில் உலகைக் கவரும் வகையில் 100க்கும் மேற்பட்ட கூடங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
அந்த மாநாடு இம்மாதம் 18ஆம் தேதி வரை நடக்கிறது.
ஐநா சுற்றுச்சூழல் மாநாட்டில் சிங்கப்பூர் கூடம்
மல்லிப்பட்டினம் நியூஸ்
0
Tags
உலகச் செய்திகள்

Post a Comment