தஞ்சை மாவட்டம்,கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள ஊர்களின் ஒருங்கிணைந்த ஜமாத்தார்களின் கூட்டம் மல்லிப்பட்டினம் மதரஸாவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 12 முஹல்லாவை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த ஜமாத்தார்கள் சங்கம் என்று பெயர் வைக்கப்பட்டது.
இது முறைப்படி சட்டத்துக்கு உட்பட்டு ரிஜிஸ்டர் செய்யப்பட இருக்கிறது.
இந்த கூட்டமைப்பில் புதுப்பட்டினம்,மல்லிப்பட்டினம,கரிசவ வயல்,சேதுபாவாசத்திரம்,சேதுபாவாசத்திரம் புது தெரு,சம்பைபட்டினம் ECR பள்ளி,சம்பைபட்டினம்,மறக்க வலசை,உடைய நாடு,மந்திரி பட்டினம்,சுப்பம்மா சத்திரம்,செம்பியன் தேவிபட்டினம் ஆகிய ஊர்களை சேர்ந்த ஜமாஅத்தார்கள் இணைந்து ஒருங்கிணைந்த கூட்டமைப்பை அமைத்தனர்.
இந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பிற்கு ஜனநாயக முறைப்படி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
ஒருங்கிணைந்த ஜமாத்தார்களின் தலைவர் அசன் முகைதீன் மல்லிப்பட்டினம்,துணைத் தலைவர் ஹிதாயத்துல்லா கரிசவ வயல்,செயலாளர் நவாஸ் கான் மந்திரி பட்டினம்,பொருளாளர் முகமது சுல்தான் புதுப்பட்டினம்,துணைச் செயலாளர் அன்வர் சேதுபாவாசத்திரம் புது தெரு,
ஆலோசகர் வழக்கறிஞர் ராஜ் முஹம்மது,ஆலோசனை குழு தலைவர் அப்துல் கரீம் மந்திரி பட்டினம்
ஆலோசனை குழு உறுப்பினர்களாக சேக் சேதுபாவாசத்திரம் புது தெரு,
பஷீர் முஹம்மது சம்பைபட்டினம் ECR பள்ளி,சகாபுதீன் உடைய நாடு,காதர் பாட்ஷா மரக்காவலசை,உமர் கதாப் சேது பாவ சத்திரம்,அப்துல் ரகுமான் மல்லிப்பட்டினம்,முகமது சதக்கத்துல்லா,கரிசவ வயல்,ஜமாலுதீன் புதுப்பட்டினம்,அப்துல் அஜீஸ் செம்பியான் தேவிபட்டினம்,முகமது அலி சம்பைப்பட்டினம்,சேக் ஜலால் மல்லிப்பட்டினம் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் 11தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.




Post a Comment