தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திர்ராஜன்பட்டினம் ஊராட்சியில் உள்ள சுற்றுலா தளமான மனோரவை காண பொதுமக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னமாக அகழி கோட்டை , தங்கும் அறைகள் , 9 அடுக்குகள் கொண்ட கலங்கரை விளக்க கோபுரம் போல் விளங்கும் இந்த மனோராவை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி கட்டினார்.தஞ்சை மாவட்ட சுற்றுலா தளத்தில் பிரதான மனோராவில் அண்மையில் படகு சவாரி,சிறுவர் பூங்கா என பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் விடுமுறை நாட்களான வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் மனோரவிற்கு வருகை தந்து படகு சவாரி மற்றும் சிறுவர் பூங்காவையும் பார்வையிட்டு பொதுமக்கள் மனோராவை வலம் வரத் தொடங்கியுள்ளனர்.
இந்த விடுமுறை நாட்களில் பாதுகாப்பிற்கு காவல் துறையினர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Post a Comment