தஞ்சை மாவட்டத்தில் நாளை(நவ.3) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!


ராஜ ராஜசோழன் சதய விழாவை ஒட்டி நவம்பர் 3ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 12ஆம் தேதி வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037ஆவது சதய விழா வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் சதய விழா நாளான 3ஆம் தேதி (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினத்துக்கு பதிலாக வருகிற 12ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post