தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றது. அதே நேரத்தில் மழை நீரை வடிகால் மூலம் வெளியேற்றும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகின்றது. சென்னை புளியந்தோப்பு, பாரிமுனை திருவிக நகர் என சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிகால் மூலம் வெளியேற்றும் பணியை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.சேகர் பாபு, சென்னை மேயர் ஆர். பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை - சுழன்று சுழன்று ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர்கள் மற்றும் சென்னை மேயர்.!
Mallinews
0
Post a Comment