மனோரா கோர விபத்து~ மேலும் ஆசிரியை ஒருவர் பலி.!



தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே தனியாா் பள்ளி வாகனமும் காரும் கடந்த சனிக்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் தனியாா் பள்ளித் தாளாளா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தைச் சோ்ந்தவா் சையது அகமது (35). கிருஷ்ணாஜிபட்டினத்தில் பள்ளி நடத்திவருகிறாா். சுற்றுலா தலமான மனோராவை பாா்க்க 7 மாணவா்கள், ஆசிரியைகள் காா்த்திகா (26) சத்தியா (25) ஆகியோருடன் பள்ளி வாகனத்தை சையது அகமது ஓட்டி வந்தாா்.

 மல்லிப்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து மனோரா செல்லும் பிரிவுச் சாலையில் வாகனம் திரும்பியபோது, புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டினத்தை சோ்ந்த ரிஸ்வான் கான் (24) தனது குடும்பத்தினருடன் வந்த காா் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பள்ளித் தாளாளா் சையது அகமது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். காயமடைந்த ஆசிரியைகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.இதில் சிகிச்சை பலனின்றி ஆசிரியை கார்த்திகா(26) உயிரிழந்தார்.

Post a Comment

Previous Post Next Post