தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை பள்ளிகளுக்கு இன்று(நவ.4) விடுமுறை.!


தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காவிரி டெல்டாவில் பல மாவட்டங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் எதிர் நோக்கும் அதிக மழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post