கிழக்கு கடற்கரைச் சாலையில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் தொடர் விபத்து ஏற்படுகிறது. எனவே மாடு வளர்ப்போருக்கு அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையானது மிகவும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். தூத்துக்குடி முதல் சென்னை வரை செல்லும் முக்கிய சாலையாகும்.இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் வேகமாக வருவதால் அருகில் வந்த பிறகே மாடுகள் சாலையில் இருப்பதை அறிகின்றனர்.உடனடியாக வாகனத்தை கட்டுப்படுத்த முயலும் போது கட்டுப்பாட்டை மீறி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
ஆகவே மாடுகளை முறையாக பராமரிக்க கால்நடை வளர்ப்போருக்கு அறிவுறுத்த வேண்டும்.

Post a Comment