ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பேரறிவாளனை கடந்த மே மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம்
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்த நிலையில், நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆளுநர் ரவி ஒன்றிய அரசுக்கே அதிகாரம் உள்ளது என கூறிவந்த நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது!
முஸ்லீம் சிறைவாசிகள விடுதலையிலும் திமுக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது சிறுபான்மை சமூக மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

Post a Comment