மல்லிப்பட்டினத்தில் சொந்த செலவில் சாலை அமைக்கும் முயற்சியில் பொதுமக்கள்.!

 


தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் புதுமனைத்தெரு சின்னமனை இடையே பல மாதங்களாக சேதமடைந்து இருந்த சாலையை பொதுமக்களே சொந்த செலவில் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மல்லிப்பட்டினம் புதுமனைத்தெரு சின்னமனை இணைப்பு சாலை மிகவும் மோசமாகவும்,சாலையே இல்லாத அளவிற்கு சேதமடைந்து காணபட்டது.சிறிய மழைக்கே நீர் தேங்கும் அவல நிலை ஏற்பட்டு குளம் போல் காட்சி அளிக்கும்.இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ,மாணவியர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த பகுதிக்கு சாலை அமைத்து தரவேண்டி ஊராட்சி கிராம சபா கூட்டங்களில் கோரிக்கைக்களும் வைக்கப்பட்டன.ஆனால் அந்த பகுதக்கு சாலை அமைக்கப்படாமலே இருந்து வந்தது.

இந்நிலையில் அப்பகுதி மக்களே நிதி திரட்டி சேதமடைந்து மழை நீர் தேங்கி காணப்படும் சாலைகளை சொந்த செலவில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




Post a Comment

Previous Post Next Post