தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் புதுமனைத்தெரு சாலையை பொதுமக்களே சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை செய்தி வெளியிட்டு இருந்தோம்.
செய்தியை சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் அவர்கள் பார்த்துவிட்டு உடனே மல்லி நியூஸ் ஆசிரியரை தொடர்பு கொண்டு எந்த பகுதி என்கிற முழு தகவலையும் பெற்றுக்கொண்டு புதுமனைத்தெரு சின்னமனை இணைப்பு சாலையையும்,வடக்கு தெரு~உமர்புலவர் தெரு இணைப்பு சாலையையும் தன்னுடைய சட்டமன்ற நிதியில் இருந்து செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
மேலும் மல்லிப்பட்டினம் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார்.தொடர்பு கொண்டு தகவல் கேட்டதற்கு சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Post a Comment