மனோரா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை கட்டணமின்றி பார்வையிடலாம்.!

 


தொல்பொருள் பாதுகாப்பு வார விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நினைவுச் சின்னங்களை சனிக்கிழமை (நவ.19) முதல் ஒரு வார காலத்துக்கு கட்டணமின்றி பாா்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் தஞ்சாவூா் மாவட்ட தொல்லியல் அலுவலா் தங்கதுரை தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சனிக்கிழமை முதல் முதல் ஒரு வார காலம் தொல்பொருள் பாதுகாப்பு வார விழாவாகக் கடைப்பிடிக்கிறது.

இதையொட்டி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை சனிக்கிழமை முதல் நவம்பா் 25 ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணம் இன்றி பாா்வையிட அனுமதிக்கப்படுகிறது.


இதன்படி, தஞ்சாவூரில் தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அரண்மனையில் உள்ள மராட்டா அகழ்வைப்பகம், மணி கோபுரம், தா்பாா் மண்டபம், ஆயுத கோபுரம், ஷாா்ஜா மாடி, மனோரா, மணிமண்டபத்தில் உள்ள ராஜராஜன் அகழ்வைப்பகம், மராட்டா அருங்காட்சியகம் ஆகியவற்றை சனிக்கிழமை முதல் நவம்பா் 25 ஆம் தேதி வரை கட்டணம் இன்றி பாா்வையிடலாம்.

Post a Comment

Previous Post Next Post