மல்லிப்பட்டினத்தில் காவல்துறை பாதுகாப்பு ஒத்திகை

 


மல்லிப்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 2 முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

'சிவிஜில் 2022' என்ற பெயரில் நேற்று தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடலோர மாவட்டங்களில் பயங்கரவாதிகள் போல ஊடுருவியவர்களை பல இடங்களில் போலீசார் மடக்கி பிடித்தனர். சில பகுதிகளில் கோட்டையும் விட்டுள்ளனர். இறுதி நாளான இன்றும் கடலோர பாதுகாப்பு படையினருடன் சுங்கத்துறையினரும் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து கடலோர பகுதிகள் மல்லிப்பட்டினம்,ராஜாமடம்,அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை உள்ளிட்ட கடலோர பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.


Post a Comment

Previous Post Next Post