பட்டுக்கோட்டையில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம்.!


தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்(டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம்(டாப்செட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன் திட்டம் ழ,சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம்,கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்தில் 10.11.2022 அன்று முற்பகல் 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.


மேற்படி கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடைய வர்கள் தகுதியானவர்கள்.சிறப்பு முகாம் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து மனுக்களுடன் மனதாரரின் சாதி சான்று,ஆதார் கார்டு,வருமானச்சான்று,ஒப்பிடச் சான்று கடன் பெறும் தொழில் குறித்த விவரம், கூட்டறவு வங்கிகள் கோரும் இதர ஆவணங்களும் இருக்க வேண்டும்.


கல்வி கடனுக்கு பள்ளி மாற்று சான்றிதழ்,உண்மைச் சான்றிதழ்,கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது மதிப்பெண்கள் ஆகிய ஆவணங்களில் ஒளிப்பட நகலை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


சிறப்பு முகாமில் கலந்துகொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர் கடன் உதவி பெற்று பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Post a Comment

Previous Post Next Post