இனி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலே தேர்வு எழுதலாம்.!



தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு ராஜாமடம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் தேர்வு எழுத சென்று கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் தேர்வு மையத்தை மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலே மாணவர்கள் எழுத வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வைத்து வந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அரசினர் மேல்நிலைப்பள்ளியிலே எழுதலாம் என்று மாவட்ட பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பினை தொடர்ந்து கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் அப்பள்ளியின் தலைமையாசிரியர், பள்ளி கல்வித்துறைக்கும்,அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் நன்றி தெரிவித்தனர்

Post a Comment

Previous Post Next Post