மல்லிப்பட்டினம் காதிரியா தெருவில் சாலை அமைக்கும் பணி மும்முரம்.!

 


தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் காதிரியா தெருவில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பல ஆண்டுகளாக முறையான சாலைவசதி இல்லாத காரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த பழைய ஐஓபி காதிரியா தெரு பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வண்ணம் ஊராட்சி சார்பில் 100 மீட்டர் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்து சாலையே மறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.






Post a Comment

Previous Post Next Post