மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் சிறப்பு முகாம்.!

 



தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேர்தல் ஆணைய உத்தரவின்படி வாக்காளர் சிறப்பு முகாம் சனி,ஞாயிறு(நவ.23,24) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம். குறிப்பாக புதிய வாக்காளர் சேர்க்க படிவம் 6, வெளி்நாட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6ஏ, வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்துக்காக ஆதார் எண் உண்மை என சான்றுரைக்க 6 பி, வாக்காளர்பட்டியில் பெயர் சேர்ப்பதை ஆட்சேபிக்கவும், ஏற்கெனவே உள்ள பெயரை நீக்குவதற்கும் படிவம் 7-ஐ சமர்ப்பிக்க வேண்டும்

Post a Comment

Previous Post Next Post