கண்ணீரோடு தண்ணீரில் மிதக்கும் மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெரு பொதுமக்கள்,நிரந்தர தீர்வு எட்டப்படுமா.? பொதுமக்கள் ஏக்கம்.!

 


தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஆண்டிக்காடு ஊராட்சி மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெருவில் சாலையில் மழை நீர் குளம் போல தேங்கி உள்ளதால் பொதுமக்கள், பள்ளி மாணவ,மாணவிகள் கடும் அவதி.

ஆண்டிக்காடு ஊராட்சியில் மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெருவில்  மழையால் சாலை முழுவதும் மழை நீர் குளம்போல தேங்கி நிற்கிறது.வடிகால் இல்லாத காரணத்தால் மழைநீர் வெளியேற்ற முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.சிறிய மழைக்கே சாலை முழுவதும் மழைநீர் தேங்கி குளம்போல தேங்கி நிற்க கூடிய நிலை இருக்கிறது.இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும்,பல அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பார்வையிட்ட போதும் எந்தவித தீர்வு எட்டப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள்,மாணவியர்கள் மழைநீரிலே செல்லக்கூடிய சூழல் இருக்கிறது,இதனால் டெங்கு,மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கின்றது.இந்த மழை நீர் வடிவதற்கு ஐந்து நாட்களுக்கும் மேல் ஆகும் என்றும்,இந்த நீர் வடியும் வரை இரவு நேரங்களில் அவசிய தேவைக்கு வெளியே செல்ல முடியாது,காரணம் பாம்பு,தேள் போன்ற விஷ ஜந்துக்குள் கடிக்கும் அபாயம் இருப்பதால் இரவில் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீர்ந்தர தீர்வு எட்டப்படும் வரை மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெரு பகுதி மக்களின் துயரம் நீண்டு கொண்டே இருக்கும்.  









Post a Comment

Previous Post Next Post