பேராவூரணி அருகே மூன்று கோவில்களில் சாமி சிலைகளை திருடி மறைத்து வைத்துக் கொண்டு, பூசாரி மூலம் குறி கேட்டு கண்டுபிடித்து தருவதாக கூறிய ஒன்பது பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் புராதானவனேஸ்வரர் கோவில், விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில், மேற்குடிக்காடு தான்தோன்றி அம்மன் கோவில்களில், கடந்த ஒரு மாதங்களில் சாமி சிலைகள் திருடு போனது.
இது குறித்து அந்தந்த கோவில் நிர்வாகம் மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, எஸ். பி. , ரவளிப்பிரியா அமைத்தார்.
இதன்படி, பட்டுக்கோட்டை தனிப்பிரிவு எஸ். ஐ. , சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், சிலை திருட்டு கும்பலை தேடினர்.
அப்போது, சேதுபாவாசத்திரம் அருகே எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், 25,. என்பவர் தான் சிலை திருட்டுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், வேலவன், 25, , நந்தக்குமார், 27, சபரி, 23, மணியரசு, 26,. வினோத், 27, செல்வகணபதி, 24, அமிர்தராஜ், 27, பிரபாகரன், 28, ஆகியோர்களை
ஒரே நாளில அடுத்தடுத்து கைது செய்து அவர்களிடமிருந்த ஒரு வெள்ளி, 5 வென்கலம் உள்ளிட்ட ஆறு சாமி சிலைகள் மீட்டனர்.
சிலைகளை திருடிய கும்பல் நூதன முறையில் சிலைகளை திருடிய கிராமங்களிலேயே பணத்தை பெற்றுக்கொண்டு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனராம். திருடு போன அனைத்து சிலைகளும் உலோக சிலைகள் என்பதால், சிலைகள் திருடுபோன கிராமங்களில் மை போட்டு பார்க்கும் மந்திரவாதி ஆன்டிகாட்டில் இருக்கிறார் அவரை போய் பார்த்தால் சிலைகளை கண்டுபிடித்து தருவார் என்ற தகவலை கசிய விடுவார்களாம். இதை நம்பும் கிராமமக்கள் சிலைகள் திருடுபோனதால் கிராமத்திற்கு கெட்டது நடந்துவிடும் போலீசார் கண்டுபிடிப்பதற்குள் மந்திரவாதி மூலம் சிலையை மீட்கலாம் என கூறியுள்ளார்.
சரவணனை பார்த்தால் இரண்டு மூன்று தினங்கள் அலையவிட்டு பக்கத்து கிராமத்தில் குளத்துக்குள் தொடர்படைய ஊரில் திருடிய சிலைகளை போட்டு வைத்து, அந்த குளத்தில் தேடுங்கள் கிடைக்கும் என்பாரம் , குளத்தில் சிலை கிடக்குமாம் இதைப்பார்க்கும் கிராமமக்கள் சந்தோசத்தில் சரவணனுக்கு கேட்கும் பணத்தை கொடுப்பார்களாம் அப்படி இந்த மூன்று கிராமத்தில் ஒரு கிராமத்தினர் சிலைகளை மீட்க, ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து தெரியவந்தது. மேலும், சிலை திருட்டு கும்பலை சேர்ந்த சிலரை போலீசார் தேடி வருகின்றனர்

Post a Comment