கேத்தரின் பள்ளியின் 6ம் ஆண்டு விழா சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பங்கேற்பு.!



தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அருகே கொள்ளுக்காடு ஊராட்சி சின்ன ஆவுடையார் கோவில் கேத்தரின் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் 6ம் ஆண்டு விழா நடைபெற்றது.

 இவ்விழாவில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும் கிறிஸ்துவின் எளிய சகோதரிகள் திருச்சபை ஜெயின் மேரிஸ் மாகாணம் சிஸ்டர் ஜோசப் ஹின், கேத்தரின் பள்ளி தலைமையாசிரியை சிஸ்டர் தெரிஸ்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம், காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் நாகூர் கனி, மாவட்ட கவுன்சிலர் காமராஜ்,கொள்ளுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சாமியப்பன் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு ஆண்டு விழாவை சிறப்பிக்க செய்தனர்.



Post a Comment

Previous Post Next Post