பா.ஜ.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்- ஜவாஹிருல்லா.!

 


பாபநாசத்தில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திராவிட இயக்க ஆட்சிகளால் தமிழ்நாடு ஏமாற்றப்பட்டிருப்பதாக சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை விட இந்தியாவில் அதிக அளவில் கல்வி கற்றவர்கள் அதிகம் உள்ள பகுதியாகவும் தொழில்துறையில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆண்ட கேரளாவிலும் கல்வி வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமூக நீதிக் கொள்கையினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராகவே செயல்படுகிறார். கவர்னர் மாளிகையை துஷ்பிரயோகம் செய்கிறார். சென்னையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நடந்து கொண்ட முறை கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்



Post a Comment

Previous Post Next Post