![]() |
பழைய புகைப்படம் |
தஞ்சாவூர் மாவட்டம் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மற்றும் ஆண்டிக்காடு ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கிய மல்லிப்பட்டினத்தில் உள்ள தார் சாலைகள் அனைத்தும் பெயர்ந்து பள்ளம்,மேடாக மாறி மண் சாலைகள் ஆகிவிட்டன. சரியான சாலைவசதிகள் இல்லாத கராணத்தினால் மழை காலங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள்,பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை மல்லிநியூஸ் வாயிலாக அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மழைக்காலம் முடிவடைந்தததும் சாலைகள் வசதி மேம்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.இந்நிலையில் மழைக்காலம் முடிவடைந்தும் பணிகள் ஆரம்பிக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மேலும் மல்லிப்பட்டினத்தில் காசிம் அப்பா தெரு,புதுமனைத்தெரு,வடக்கு தெரு,இராமர் கோவில் தெரு,ஷாபி இமாம் தெரு ஆகிய பிரதான தெருக்களில் சரியான சாலை வசதியின்றி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த பகுதிகளுக்கு அடிப்படை வசதியான தரமான சாலை வசதி அமைக்கப்படுமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
Post a Comment