புதர் மண்டி காணப்படும் மல்லிப்பட்டினம் விளையாட்டு மைதானம் சீரமைக்க இளைஞர்கள் மற்றும் சமுதாய நலமன்றம் கோரிக்கை.!



தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம்,சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி,மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைத்திட இளைஞர்கள் மற்றும் சமுதாய நலமன்றம் கோரிக்கை.

மனிதர்களின் ஆரோ க்கியத்தில் விளையாட்டிற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.அப்படியிருக்கையில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் விளையாடுவதற்கும்,பெரியவர்கள் நடைபயிற்சி ஆகியவை மேற்கொள்ள மைதானம் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுவதால் விளையாட்டு மைதானங்கள் முழுவதும் அதிகளவில் புதர் மண்டி காணப்படுவதால் சிறுவர்கள் விளையாடு வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். புதர் அதிகளவில் இருப்பதால் பகலிலேயே விஷ பூச்சிகள் இங்கு அடைக்கலம் ஆகும் வாய்ப்பு உள்ளது. 

ஆகவே பள்ளி மாணவர்கள்கள்,இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானத்தை உடனடியாக சீரமைத்து தரவேண்டுமென அரசுக்கு இளைஞர்கள் மற்றும் சமுதாய நலமன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






Post a Comment

Previous Post Next Post