தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி,மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெரு சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராவிடம் அப்பகுதி இளைஞர்கள் அளித்தனர்.
மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவில் அடிப்படை வசதியின்றி இருப்பதாகவும்,புதுக்குளத்தை சுற்றி குப்பைகள் தேங்கி காணப்படுவதால் இதனால் நோய் தொற்று பரவும் அபாய சூழல் இருக்கிறது, அந்த பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான ஷாபி இமாம் தெருவில் சிறுவர்களுக்கான பூங்கா அமைத்திட வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா அதிகாரிகளிடத்தில் கலந்து பேசி தீர்வு காண முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
Post a Comment