மல்லிப்பட்டினத்தில் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவளித்த உரிமையாளர்கள்.!

காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு காவிரியில் உரிய நேரத்தில் தேவையான நீரை திறந்து விடாமல் பிடிவாதமாக உள்ளது. இந்த நிலையில், தஞ்சாவூரில் கடந்த 7 ஆம் தேதி திமுக விவசாய அணி மற்றும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அந்த கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் எஞ்சி இருக்கும் குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடியை தொடங்கவும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு மாதா மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரக்கோரி தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அப்போது மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டங்களை நடத்தவும் விவசாயிகள் முடிவு செய்து உள்ளார்கள். அதன்படி திமுக விவசாய அணி உட்பட அனைத்து விவசாய சங்கங்களும் இன்று போராட்டத்தில் குதித்து உள்ளனர். அதிரையில் காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கி உள்ளதால் மல்லிப்பட்டினம் ப்ளூ ஸ்டார் மொபைல்ஸ்,தாஜ்மகால் ஷூ மார்ட் மற்றும் மதினா மொபைல்ஸ்,ஆவின் பாலகம் ஆகிய கடைகள் அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post