அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம்- இன்று சோதனை.!

 


தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசர கால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் ''செல் ஒலிபரப்பு எச்சரிக்கை'' சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது.

சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற கடுமையான வானிலை எச்சரிக்கைகள், பொது பாதுகாப்பு செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க செல் ஒலிபரப்பு எச்சரிக்கை வழங்கப்பட உள்ளது.


பொதுமக்களின் பாதுகாப்பில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்,ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குனரிடமும் ''செல் ஒலிபரப்பு எச்சரிக்கை'' அமைப்பின் சோதனையை இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடத்த உள்ளது.இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ,பயப்படவோ வேண்டாம் என்று தஞ்சை மாவட்ட  செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post