மல்லிப்பட்டினம் சின்னமனை நடுநிலைப் பள்ளியில் அரசு ஆண்டு விழா...


தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டுவிழா என்கிற திட்டத்தின் கீழ் சரபேந்திரராஜபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமனை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

 இதில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மாறன் தலைமையில் விழா துவங்கப்பட்டு மற்ற சக ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு இந்த விழா நடந்தேறியது. இதில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சந்திரசேகரன் மற்றும் செபஸ்டி அம்மாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கிராம பொறுப்பாளர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்...

Post a Comment

Previous Post Next Post