எச்சரிக்கை:- பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்.!

 


சென்னையில் பறிமுதல் செய்த பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

புதுச்சேரியை தொடர்ந்து சென்னையிலும் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த வாரம் சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பறிமுதல் செய்த பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பறிமுதல் செய்த பஞ்சுமிட்டாயில் ரொடமைன் பி என்ற புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது.ஆகையால் எச்சரிக்கையாக இருக்க பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post