மெரினாவில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரியை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பரிசோதனையில், பஞ்சுமிட்டாயில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை உருவாக்கூடியது என்பது தெரியவந்தது.இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு பாதுகாப்புத்துறையின் பரிந்துரையின்பேரில் பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் தடை செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தமிழக அரசு தடை வித்துள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
.jpeg)
Post a Comment