தமிழக வாழ்வுரிமை கட்சியின் பேராவூரணி தொகுதி பொறுப்பாளராக மல்லிப்பட்டினம் பஷீர் அகமது நியமனம்.!




 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டும்  வருகின்ற மே மாதத்திற்குள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டியும் கட்சி உறுப்பினர் சேர்க்கை,கிளைகள் அமைத்தல்,கொடியேற்றம் போன்ற  அமைப்பு பணிகள் செய்வதற்காக பஷீர் அகமது பேராவூரணி தொகுதி பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுளார்.

அவருக்கு உறுதுணையாக கட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஏதுவாக ஒன்பது பேர் பணிக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குமார்,ஹபிபுல்லா,சிவா,ஆனந்த குமார்,முகமது யூனுஸ்,சத்ய மூர்த்தி,சாகிர் உசேன்,தௌபிக் அலி,சிவபாலன் ஆகியோர் ஆவர்.

Post a Comment

Previous Post Next Post