தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வரக்கூடிய பல்வேறு அவசரமான இரத்த தேவைகளை அரசுடன் இணைந்து இரத்த தான தன்னார்வ அமைப்புகள் பூர்த்தி செய்து நோயாளிகள் பூரண குணமடைய எந்த வித பிரதிபலன்களையும் பாராமல் உதவி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பள்ளிவாசல் வளாகத்தில் இன்று16.02.2024 காலை 12மணி முதல் தஞ்சாவூர் மாவட்ட கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பினர் இரத்த கொடையாளர் சேர்க்கை முகாமை நடத்தினர்.
இம்முகாமில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுமார் 100 இரத்த கொடையாளர்களின் விபரங்கள் அவர்களின் முழு விருப்பத்துடன் பெறப்பட்டது.
இந்த முகாமை கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அதிராம்பட்டினம் நகர தலைவர் அப்துல் மாலிக் தலைமை தாங்கி துவக்கிவைத்தார்.
இம்முகாமில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் மாவட்ட ஆலோசகர் வ.விவேகானந்தம், அதிராம்பட்டினம் நகர துணைதலைவர் நூர் முஹம்மது மற்றும் மாவட்ட குருதி கோடை ஒருங்கிணைப்பாளர் பாய்ஸ் அகமது மற்றும் உறுப்பினர் ஏ.முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டு இரத்த தானத்தின் அவசியம், யார் யார் இரத்த தானம் செய்யலாம் என்பது போன்ற பல விபரங்களை எடுத்து கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

Post a Comment