தஞ்சை காசுக்கடை தெரு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஸ்டேட்
வங்கி காலனி பகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 45) என்பதும், அவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைசெய்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவிந்தனை கைது செய்தனர். இதேபோல் நாலு
கால் மண்டபம் கடைத்தெருவில் லாட்டரி சீட்டு விற்ற
கரந்தை பகுதியை சேர்ந்த குமரவேல்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Post a Comment