தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைப்பட்டினம் கிளை சார்பில் இன்று (18/02/2024) காலை 10 மணிமுதல் 2 மணி வரை, சமுதாயக்கூடத்தில்இரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயலாளர் ஆவணம் S.ரியாஸ் அவர்கள் தலைமை வகித்தார்கள்,மாவட்ட துணை செயலாளர் சேக் அப்துல் காதர் மற்றும் கிளை தலைவர் ஜகுபர் அலி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இம்முகாமை தஞ்சை அரசு இராசா மிராசுதாரர் மருத்துவமனை(RMH) Dr.G.சிந்தியா அவர்கள் மற்றும் இரத்த வங்கி ஆலோசகர் திருமதி.புனிதா அவர்கள் அவர்களது மருத்துவ குழுவுடன் இணைந்து நடத்தி கொடுத்தனர்.
மேலும் இம்முகாமில் கலந்துகொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று உடல் தகுதி அடிப்படையில் 34யூனிட் இரத்தம் தானமாக தஞ்சை அரசு இராசா மிராசுதாரர் மருத்துவமனைக்கு TNTJ செந்தலைப்பட்டினம் கிளை சார்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை கிளை நிர்வாகிகள் பாரீஸ்,ஜமால் மற்றும் தாஜுதீன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



Post a Comment