இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கிய சேதுபாவாசத்திரம் போலீஸ் ஏட்டு கைது..!


இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கிய சேதுபாவாசத்திரம் ஏட்டு கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இலங்கை தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று விநியோகம் செய்யப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன .

இதை எடுத்து தஞ்சை கியூ பிரிவு போலீஸ், துணை போலீஸ் சுப்பிரண்டு சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் இலங்கைத் தமிழர்களுக்கு போலியாக ஆவணங்கள் தயாரித்து அதை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தும் உரிய போலீஸ் விசாரணை ஏதும் நடத்தாமல் அதற்கு ஒப்புதல் வழங்கியதும் தெரிய வந்தது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள சிலரின் துணையோடு இந்திய அரசியல் பாஸ்போர்ட் வழங்கியதும் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தை சார்ந்த போலீசார் முறையாக விசாரணை நடத்தாமல் செயல்பட்டது தெரிந்தது.

மேலும் இதற்கு உடந்தையாக சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு கிராம தபால் ஊழியராக பணியாற்றிய கோவிந்தராஜ் வயது 64, கும்பகோணத்தைச் சேர்ந்த வடிவேல் வயது 52, ராஜு வயது 31, சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த பாலசிங்கம் 36, திருச்சி கல்கண்டார் கோட்டையைச் சார்ந்த வைத்தியநாதன் 52, ராஜாமடத்தை சேர்ந்த சங்கர் 42, ஆகிய ஆறு பேரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் கும்பகோணம் பம்பம்படைஊரைச் சேர்ந்த சங்கரன் 52 என்பவரை கைது செய்தனர்.

இருப்பினும் இந்த வழக்கில் முக்கிய நபரான சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலைய ஏட்டுவும் எழுத்தாளருமான சேஷா வயது 47, போலீசார்ரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.இந்த வழக்கு தொடர்பாக அவர் பணியிட நீக்கமும் செய்யப்பட்டார்.

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற விவரத்தில் உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டு சேஷாவை உடனே கைது செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எடுத்து கியூ பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த சேஷாவை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் சேஷா இருப்பதாக கிடைத்த தகவல் பேரில் போலீசார் அங்கு சென்று அவரது அவரை கைது செய்தனர். பின்னர் சேஷாவை பட்டுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

நன்றி : தினத்தந்தி 18.02.2024, பக்கம் 13

Post a Comment

Previous Post Next Post