பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை போலீஸார் நடத்திய சோதனையில் 2கிலோ கஞ்சா பிடிபட்டது.
தஞ்சை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை லட்சத்தோப்பு, முதல் சேரி, கீழப்பாளையம், குலால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதையன் மகன் குணா (27), குலால் தெரு பகுதியை சேர்ந்த ரவி மகன் சதீஷ் (26), அந்தோணியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் ரிஷி குமார் (24), நேரு நகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் சண்முக பிரகாஷ் ( 26 ), முதல் சேரி பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜோஸ்வா(23) மற்றும் தனியார் விடுதியில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் யாதவ் ஆகியோரிடமிருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சுமார் 2 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் கைப்பற்றினர். மேலும் இவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
.webp)
Post a Comment