தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!

 



தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. கன மழையால், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.


இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரியங்கா உத்தரவிட்டார். அதேநேரம், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

Post a Comment

Previous Post Next Post