ஆன்லைனில் இலவசமாக ஆதார் அட்டை மாற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக மார்ச் 14,2024 வரை கொடுக்கப்பட்ட கால அவகாசம் தற்போது ஜுன்14, 2024 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களின் கோரிக்கையை ஏற்று கால நீட்டிப்பு வழங்கியுள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. அதன்படி 'MyAadhaar Portal' தளத்தில் இலவசமாக ஆதார் அப்டேட் செய்து கொள்ளலாம். எனினும் நேரடியாக ஆதார் மையம் சென்று அப்டேட் செய்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிப்பது அவசியமாகிறது. உங்கள் ஆதார் டேட்டாக்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அந்த வகையில் ஆதாரின் Demographic தரவுகளை கட்டணம் ஏதும் இல்லாமல் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

Post a Comment