இலங்கையுடன் குத்தகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன் அறிக்கை இதில் குறிப்பிட்டுள்ளதாகவது,
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களின் உடைமைகளை பறிமுதல் செய்து மீனவர்களையும் கைது செய்து வரும் இலங்கை அரசை ஒன்றிய மோடி அரசு கண்டுகொள்ளாமல் தமிழக மீனவர்கள் தமிழக கடற்கரை பகுதியில் இல்லாமல் செய்வது என்ற உள்நோக்கத்தோடு செயல் படுகிறாரா என்ற கேள்வி தமிழக மீனவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த வேலையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் ஒரு ஒப்பந்தம் செய்தாலே மீனவர் பிரச்சினைகளுக்கு ஒரு தற்காலிக தீர்வை ஏற்படுத்தும். இதனை செய்யாமல் கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானிக்கும், அதானிக்கும் இலங்கையில் பெரும் தொழில் செய்ய அந்த நாட்டு அரசுடன் பேசி அவர்களுக்கு பல சலுகைகளை பெற்று கொடுத்துள்ள நமது பிரதமர் மோடி தமிழக அரசை குறை சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
தமிழக முதல்வர் அவர்கள் இலங்கை அரசால்பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பல எண்ணிலடங்கா உதவிகளை செய்து வருவது எங்கள் மீனவர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தித் தருகிறது. எங்கள் தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழர்கள் இலங்கை கடல் கரை பகுதியில் அதிகம் வசித்து வருகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு இருநாட்டு மீனவர்களும் தொழில் ரீதியாகவும் உறவில் பெண், மாப்பிள்ளை கொடுத்தும் உறவாடி வந்தனர்.இந்த நிலையை நமது ஒன்றியத்தில் ஆட்சி செய்தவர்கள் உடைத் தெரிந்து விட்டதால் இன்றைக்கு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிஜேபி மோடி அரசு கடந்த பத்து ஆண்டுகளில் தமிழக மீனவர்களுக்கு உயிரும் உடைமையும் போயி கோவணமே மிஞ்சியது. இன் நிலை மாற எதிர்காலத்தில் தமிழக அரசே குத்தகை அடிப்படையில் பரஸ்பரம் தொழில் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இருநாட்டு மீனவர்களும் முன் இருந்தது போல் பரஸ்பரமாய் தொழில் செய்ய தமிழக அரசு எதிர்கால ஒன்றிய அரசின் சிறப்பு அனுமதியுடன் மீனவர்கள் பயமின்றி தொழில் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசு மீனவர்களுக்கு செய்து வரும் உதவிகளை அறிந்தும் அவற்றை கண்டு கொள்ளாமல் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசி அதிகப்படியான வடை சுட்டு வரும் நமது பிரதமர் மோடியை நமது மீனவர்கள் இனியும் நம்ப மாட்டார்கள். பிரதமர் கூறும் பொய்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். உண்மை மீனவர்களுக்கு நன்கு தெரியும். எதிர்காலத்தில் மக்களுக்கேற்ற நல்ல அரசுஅமைய எல்லோரும் பாடுபடுவோம் என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Post a Comment