SDPI_கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 23_05_24 இன்று_நடைப்பெற்றது
இக்கூட்டத்திற்க்கு SDPI கட்சியின் மாவட்ட தலைவர் முகமது ரஹீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:-
1.சாமானிய மக்களை வாட்டி வதைக்க கூடிய வகையில் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின்கட்டண வரி, முத்திரைத்தாள் மற்றும் விஷம் போல் ஏறி வரும் விலைவாசி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
2.SDPI கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நலத்திட்டங்கள் வழங்குதல், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
3.தமிழகத்தில் மாணவர்கள் இளைஞர்கள் வாழ்வை சீரழிக்க கூடிய போதை பொருள்கள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட நகர, நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.
இறுதியாக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஸ்லம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.



Post a Comment