தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி 40 தொகுதியையும் கைப்பற்றியதற்காகவும்,திமுக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக முரசொலி வெற்றி பெற்றதற்காகவும் கிளை செயலாளரும்,மாவட்டக் கழக பிரதிநிதி ஹபீப் முகமது,மாவட்ட மீனவரணி தலைவர் அபுதாகீர் தலைமையில் பேருந்து நிலையத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டணி கட்சிகள் சார்பில் நாகூர் ஹனி, பஷீர் அகமது, அப்துல் பகத்,கிளை அவைத் தலைவர் அப்துல் அஜீஸ்,துணை செயலாளர் நூருல் ஹமீது, ஹஸன் முஹைதீன்,அப்துல் மாலிக்,இளைஞரணி சபீர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

Post a Comment