வாக்கு
எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு சட்டப்பேரவை
தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போட்டப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
ஒவ்வொரு சுற்றிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் ஒலி பெருக்கி மூலம்
அறிவிக்கப்பட்டது.
மொத்தம்
23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொடர்ந்து அனைத்து
சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் ச.முரசொலி முன்னிலை வகித்தார். இதில் திமுக
வேட்பாளர் ச.முரசொலி 5,02,245 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை
எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வேட்பாளர் பி.
சிவநேசன் 1,82,662 வாக்குகள் பெற்றார். அவரைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர்
எம்.முருகானந்தம் 1,70,613 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
ஹிமாயூன் கபீர் 1,20,293 வாக்குகளும் பெற்றனர்

Post a Comment