தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி,மல்லிப்பட்டினத்தில் கடந்த வாரம் பைபர் படகில் நான்கு பேர் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது, இதில் மூவர் காப்பற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.
அந்தோணி என்பவர் மட்டும் மீனவர்கள்,மீன்வளத்துறை அதிகாரிகள் தேடியும் கிடைக்கவில்லை,இதனால் மிகுந்த சோகத்தில் குடும்பம் மூழ்கியது.இந்நிலையில் கணவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு Human Rights சர்வதேச மனித உரிமைகளின் கூட்டமைப்பின் மாநில தலைவரும்,சமுதாய நலமன்ற மூத்த நிர்வாகியுமான Lion DR.SRK.அசன் முகைதீன் நேரில் சென்றுஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் மற்றும் பண முடிப்பும் வழங்கினார். மேலும் மாவட்ட பொறுப்புதாரிகள் H.A.அப்துல் ஹமீது, TMR. ராவுத்தர் கலந்து கொண்டார்கள்

Post a Comment