கடலில் கடும் சூறைக்காற்று படகு கவிழ்ந்து மீனவர் பலி.!

 



தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே சுப்பம்மாள்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கஜினி முகமது (வயது 55)  மீனவர், இவர் தனக்கு சொந்தமான நாட்டுப் படகில் காமராஜ் (வயது 30) என்பவருடன் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்.  இந்நிலையில் புதன்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் மீனவர் கஜினி முகமது சென்ற நாட்டுப் படகு சூறைக்காற்றின் வேகத்தால் கடலுக்குள் கவிழ்ந்ததில் இருவரும் கடலுக்குள் தவறி விழுந்தனர். இதில் காமராஜ் மட்டும் நீந்திக் கரை சேர்ந்த நிலையில், கவிழ்ந்து கிடந்த படகில் இருந்த கஜினி முகமதுவை காணவில்லை.  

இது குறித்து, புதன்கிழமை இரவு 11 மணியளவில் கரை திரும்பிய மீனவர்கள் மீன்வளத் துறை, கடலோர காவல் படை, வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், வியாழக்கிழமை காலை கடலுக்குள் சென்று அலுவலர்கள் பார்வையிட்டு காணாமல் போன மீனவரைத் தேடினர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினம் கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில், மீனவர் கஜினி முகமது உடல் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  
இறந்த மீனவர் கஜினி முகமதுக்கு பரிதா (45) என்ற மனைவியும், திருமணம் ஆன 3 மகள்களும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் குழும ஆய்வாளர் மஞ்சுளா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post