தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி,மல்லிப்பட்டினத்தில் கடந்த வாரம் பைபர் படகில் நான்கு பேர் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது, இதில் மூவர் காப்பற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.
அந்தோணி என்பவர் மட்டும் மீனவர்கள்,மீன்வளத்துறை அதிகாரிகள் தேடியும் கிடைக்கவில்லை,இதனால் மிகுந்த சோகத்தில் குடும்பம் மூழ்கியது.இந்நிலையில் கணவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.இதில் மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி தலைவர் அல்லாப்பிச்சை,செயலாளர் அப்துர் ரகீம்,துணை தலைவர்கள் அப்துல் அஜீஸ்,அப்துல் காதர்,துணை செயலாளர்கள் சகாப்தீன்,அப்துல் அஜீஸ், மாவட்ட கழகப் பிரதிநிதி , விசை படகு சங்க தலைவர் ஹபீப் முகமது,மாவட்ட மீனவர் அணி தலைவர் அபுதாஹீர்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அப்துல் வகாப்,நண்பர்கள் குழு அப்துல் மாலிக், ஜமாஅத் உறுப்பினர்கள் நிஜாம் மற்றும் ராவுத்தர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும் இது சம்மந்தமான தகவல்களை மாவட்ட ஆட்சியரிடம் தக்க ஆவண அறிக்கை தாக்கல் செய்ய கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.



Post a Comment